நாட்டின் முக்கியமான மாகாணம் மற்றும் வருமானம் சேகரிக்கப்படும் மேல் மாகாணத்தின் மக்களுக்கு மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவை ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புதிய இணையத்தளம் ஒன்றினை அமைக்க முடியுமாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விசேடமாக அண்மையில் அரசினால் மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையினைப் பெற்றுக்கொடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் நோக்கம் மற்றும் அபிலாசைகளை மிகவும் உற்பத்தித்திறன் மிக்கதாக பெற்றுக்கொடுப்பதற்கு இதன் ஊடாக இயலுமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும் மேல் மாகாணத்தின் மக்களால் தொடர்ச்சியாக மாகாணத்தின் வரி செலுத்தும் மக்களினால் மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பினை மிகவும் மனம் கூர்ந்து நினைவு கூருகின்றேன். எதிர்காலத்திலும் வரி செலுத்துபவர்களுக்காக வினைத்திறன் மிக்க மற்றும் பயனுள்ள சேவை ஒன்றினை வழங்கி, மாகாணத்தின் வருமானத்தினைச் சேகரித்து, பொருளாதார மற்றும் அபிவிருத்திக்காக மேல் மாகாண மாகாண சபையினை இயங்கச் செய்வதற்கு மாகாண இறைவரித் திணைக்களத்திற்கு இதன் ஊடாக இயலுமாக இருக்கும் என்பதனை நம்புகின்றேன்.