நோக்கங்கள்
மேல் மாகாணத்தின் 1990 இன் நிதி நியதிச்சட்டம், 1994 இன் 04 ஆம் இலக்க நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் தண்டத்தினை அமுல்படுத்துவதற்கு உரிய நியதிச்சட்டம், 2010 இன் 04 ஆம் இலக்க முத்திரைக் கட்டணங்களைக் கையளிப்பதற்கான நியதிச்சட்டம், 2012 இன் 02 ஆம் இலக்க கனிய வள நியதிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மத்திய அரசினால் பணமனுப்பல் செய்யப்படும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி வருமானம் மற்றும் முத்திரைக் கட்டண வருமானத்தினை சேகரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
விடயங்கள்
- நிலுவை புரள்வு வரியினைச் சேகரித்தல்
- மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கையளிக்கும் போது செலுத்தவேண்டிய முத்திரைக் கட்டணங்களை அறவிடல்.
- சொத்துக்களை கையளிக்கும் போது அச் சொத்துக்களின் சந்தைப் பெறுமதி தொடர்பாக மதிப்பீட்டாளரின் கருத்தினை வழங்குதல், மற்றும் சரியான முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதா என்பதற்கு உறுதியினை சான்றுப்படுத்திக் கொடுத்தல்..
- சொத்தின் சந்தைப் பெறுமதி குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிகளைப் பரி சோதனை செய்து மேலதிக முத்திரைக் கட்டணங்களை அறவிடுதல்.
- மேல் மாகாணத்தில் நடைபெறும் பரிசுப் போட்டிகளுக்காக செலுத்தவேண்டிய வரியினை அறவிடுதல்.
- மேல் மாகாணத்தினுள் கனியங்களை அகழ்வதற்கான கனிய வள வரியினை அறவிடுதல்..
- கலால் அனுமதிப் பத்திர கட்டண வருமானங்களைச் சேகரித்தல்.
- மாகாணத்தினுள் அமைந்துள்ள நீதிமன்றங்களினால் அமுல்படுத்தப்படும் நீதி மன்றத் தண்ட நிதியினைச் சேகரித்தல். மற்றும் நீதிமன்ற ஆவணங்களுக்காகச் செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணங்களைச் சேகரித்தல்.
- மத்திய அரசினால் வழங்கப்படும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி வருமானம் மற்றும் முத்திரைக் கட்டண வருமானத்தினை சேகரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.