முத்திரைக் கட்டண வரி

முத்திரைக் கட்டண வரி தொடர்பாக

 

1990 இன் 6  ஆம் இலக்க மேல் மாகாணத்தின் நிதி  நியதிச்சட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. ( 1991 ஜனவரி 01 தொடக்கம்)

  1. முத்திரைக் கட்டணங்களை அமுல்படுத்துதல் :-
  2. மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நிலையான சொத்துக்களைக் கையளிக்கும் போது உரியதான உறுதிகளுக்காக
  3. மேல் மாகாணத்தின் ஏதாவது நீதி மன்றம் ஒன்றினால் கையளிக்கப்படும் வழக்கு நடவடிக்கையின் போது முன்வைக்கப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்காகவும்.
  4. மேல் மாகாணத்தினுள்  மோட்டார் வண்டி ஒன்றின் உரிமையினைக் கையளிக்கும் போது

மேல் மாகாணத்தின்  இறைவரித் திணைக்களத்தினால் நிலையான சொத்துக்களைக் கையளிப்பது தொடர்பான உறுதிகள் தொடர்பாக  நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

 

  1. முத்திரைக் கட்டணங்களில் விலக்குப் பெறும் ஆவணங்கள் மற்றும் உறுதிகள் :-

குற்றவியல் வழக்குகளில்  பிணை உறுதி,  அரசினால் அல்லது ஏதாவது நபர் ஒருவரினால் அரசுக்காக /அரசுக்குப் பதிலாக ஏதாவது நிலையான சொத்து ஒன்று / மோட்டார் வாகனம் ஒன்றைக் கையளித்தல், அரசினால் செலுத்த வேண்டியதான, அரசினால் / அரசுக்குப் பதிலாக/ அரசின் பெயரில் எழுதி கையொப்பமிடப்பட்ட உறுதி, 76(2) பிரிவின் கீழ்  அதிகாரமாகும் ஏதாவது நாடு ஒன்றினால்/ பதிலாக/பெயருக்கு எழுதிக் கையொப்பமிடப்பட்ட  உறுதி ,நொத்தார்சி ஒருவரினால்   உறுதிப்படுத்தப்பட்ட கடைசி   விருப்பப் பத்திரம்  அல்லது கடைசி   விருப்பப் பத்திர முழு ஆவணங்கள்  மற்றும்  வழக்கு நடவடிக்கையின் போது சமர்ப்பிக்கப்படும்  சில  ஆவணங்கள்  ( அரச அலுவலகர்களினால்  நீதி மன்றத்திற்கு  முன்வைக்கப்படும்  ஆவணங்கள்  ஏழை ஒருவராக  முன்னிக்கும்  நபர் ஒருவரினால்  முன் வைக்கப்படும்  ஆவணங்கள், பிடிவிறாந்து , மான்சூன்  போன்றன )

முத்திரைக்கட்டண வரி விகிதம்

 

  • விற்கும்போது  –

நிலையான சொத்தின் பெறுமதியில் முதல் ரூபா 100000/= அல்லது அதன் ஒரு பகுதிக்கு –     3%

மிகுதிப் பெறுமதியின் கீழ்                                        –     4%

  • பரிசளிக்கப்படும் போது –
    • பரிசளிக்கப்படும் நிலையான சொத்தின்  உரிய பெறுமதியில்
    • முதல் ரூபா 50000/= அல்லது அதன் ஒரு பகுதிக்கு                              –     3%
    • மிகுதிப் பெறுமதியின் கீழ்                 –     2%
    • இந்த சதவீத அளவு வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளது  ( இலக்கம்  637/8-1990.11.20  ஆந் திகதி

முத்திரைக் கட்டண வரி  மதிப்பீடு

  • விற்கும் போது – அந்தச் சொத்தினை  திறந்த சந்தையில்  விற்கக் கூடிய விலை ( மதிப்பீட்டாளரின்  கருத்திற்கு இணங்க)
  • பரிசளிக்கப்படும் போது –  மதிப்பிட்டாளரின் கருத்துப்படி கையேற்றுக் கொண்ட  தினத்திலான பெறுமதிக்கு  அத் தினத்திற்குப் பின் மேற் கொள்ளப்பட்ட சேர்க்கைகளின் மற்றும் செளிப்புக்களின் பெறுமதியினை சேர்த்து கிடைக்கும் பெறுமதி  அல்லது சொத்தினை திறந்த சந்தையில் விற்று கிடைக்கக் கூடிய பெறுமதி  ஆகிய இரண்டில்  குறைந்த பெறுமதியாகும். கையேற்றுக் கொண்ட தினத்தினைத் தாண்டும் தினம் 1977.03.31 ஆகும்.

தரவிறக்கங்கள்

நியதிச்சட்டம் மற்றும் திருத்தங்கள்

circiularsstatuesgazzetsform_icon5

நியதிச்சட்டம் மற்றும்  திருத்தங்கள் சுற்றறிக்கைகள்  வர்த்தமானிப் பத்திரிகை  விண்ணப்பப் படிவம்