சுற்றறிக்கைகள் வர்த்தமானிப் பத்திரிகை விண்ணப்பப் படிவம்
பரிசுப் போட்டி வரி
பரிசுப் போட்டி வரி தொடர்பாக
மேல் மாகாணத்தினுள் மேம்பாட்டிற்காக அல்லது பிற நோக்கம் ஒன்றின் முன்னேற்றத்திற்காக நடாத்தப்படும் ஒவ்வொரு போட்டி ஒன்றும் பரிசுப் போட்டி ஒன்றாக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாகாணத்தினுள் பரிசுப் போட்டி ஒன்றினை மேம்பாட்டிற்கு அல்லது நடாத்த எண்ணும் ஒவ்வொரு நபர் ஒருவரும் போட்டி நடைபெறுவதற்கு 14 நாட்களுக்கு முன் அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பரிசுப் போட்டி வரி விகிதம்
இந் நியதிச்சட்டத்தின் 98 (3) உப பிரிவின் மூலம் மாகாண சபையின் நிதி விடய அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ள அதிகாரத்திற்கு இணங்க 1553/9 ஆம் இலக்க 2008.06.11 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் அமுல்படுத்தப்பட்டு உள்ள கட்டளைகளுக்கு இணங்க மேல் மாகாணத்தினுள் நடாத்தப்படும் ஒவ்வொரு பரிசுப் போட்டியின் போது வழங்கப்படும் பரிசுக்களின் மொத்த சந்தைப் பெறுமதியில் 20% சதவீதமான வரி ஒன்று பரிசுப்பேட்டி வரியாக செலுத்தப்பட வேண்டும் எவ்வாறான போதும் பரிசுப்போட்டி ஒன்றின் போது வழங்கப்படும் பரிசுக்களின் மொத்தப் பெறுமதி ரூபா . 100000/= இனை விடக் குறைவாயின் பரிசுப் போட்டி வரி விலக்களிக்கப்படும்..
பரிசுப் போட்டி வரி மதிப்பீடு
பரிசுப் போட்டி ஒன்றின் போது செலுத்த வேண்டிய வரியினை எப்படிக் கணக்கிட வேண்டும் என்பது மேல் மாகாணத்தின் நிதி நியதிச் சட்டத்தின் 98(1) ஆ பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பரிசுப் போட்டியின் போது வழங்கப்படும் பரிசுகளின் சந்தைப் பெறுமதியின் கீழ் பரிசுப் போட்டி வரி கணக்கிடப்படுகின்றது.
நியதிச்சட்டம் மற்றும் திருத்தங்கள்